Chennai Today News

சூர்யாவின் அறிமுகப்பாடலை ரிலீஸ் செய்த ஹாரீஸ் ஜெயராஜ்

சூர்யாவின் அறிமுகப்பாடலை ரிலீஸ் செய்த ஹாரீஸ் ஜெயராஜ்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘S3’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் அறிமுகத்துக்காக கம்போஸ் செய்த பாடலின் முதல் வரியை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

‘ஓ சோனி சோனி, சூப்பர் சோனிக்’ என்று தொடங்கும் இந்த பாடல் சூர்யாவின் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்றும் இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்பதாக ஹாரீஸ் ஜெயராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!