shadow

சூர்யா 37′ படத்தின் ஹாரீஸ் ஜெயராஜ் செய்த புதுமை

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா நடித்து வரும் ‘சூர்யா 37’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் நடந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது கம்போஸ் செய்து முடித்துள்ளார். இந்த பாடலை பிரபல தனியார் இசைப்பள்ளியை சேர்ந்த சின்னஞ்சிறு குழந்தைகளை அவர் பாட வைத்து புதுமை செய்துள்ளார். இந்த பாடல் படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் வருவதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, சாயிஷா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் சிராஜ் ஜானி, ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி ஆகிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

Leave a Reply