shadow

பஞ்சர் ஒட்டும் கடைக்கு ரூ.77 கோடி மின்கட்டணம். அதிர்ச்சி தகவல்
eb
அரியானா மாநிலத்தில் பரிதாபாத் நகரில் சுரீந்தர் ஆட்டோ வொர்க்ஸ் என்ற பஞ்சர் ஒட்டும் கடைக்கு கடந்த மாதம் மின்கட்டணமாக ரூ.77 கோடி வந்துள்ளது. இதனால் அந்த கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ரூ.5க்கும் ரூ.10க்கும் பஞ்சர் ஒட்டி தனது குடும்பத்தை ஓட்டி வரும் ஒருவருக்கு அரியானா மாநில மின்வாரியம் கடந்த மாதத்தின் மின்கட்டணத்தொகை எவ்வளவு என்பதை தபால் மூலம் அனுப்பியிருந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் உடனே மூர்ச்சை அடைந்துவிட்டார். காரணம் அதில் ரூ.77 கோடி மின்கட்டணம் கட்ட வேண்டும் என்று இருந்ததே ஆகும்.

இது குறித்து அந்த கடைக்காரர் கூறும் போது, ‘‘வாடகை எடுத்து தான் இந்த பஞ்சர் கடையை நடத்தி வருகிறேன். வழக்கமாக, எனக்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல், ரூ. 2,500க்குள் தான் வரும். இத்தனைக்கும் என் கடையில் ஒரு பல்பும், ஒரு மின்வசிறியும் தான் பயன்படுத்தி வருகிறேன். தவிர இதற்கு முன் செலுத்த வேண்டிய அனைத்து மின் கட்டணங்களையும் நிலுவை வைக்காமல் செலுத்தி விட்டேன். அப்படி இருந்தும், ரூ.77 கோடிக்கு மின் கட்டணம் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அரியானா மாநில மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இம்மாதிரியான தவறுகள் நடப்பதாகவும், விரைவில் இந்த தவறுகள் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோனிபட் மாவட்டத்தில் வெற்றிலை பாக்கு கடை நடத்தி வருபவருக்கு ரூ.132 கோடிக்கும், கடந்த 2007-ம் ஆண்டு, நார்நவுல் நகரில் வசித்து வரும் நுகர்வோர் ஒருவருக்கு ரூ.234 கோடிக்கும் மின் கட்டணம் செலுத்தும்படி ரசீது அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Hariyana EB gives shopkeeper bill of Rs.77 crores

Leave a Reply