ஹரிஷ் கல்யாண், ரைசா திரைப்படம் செய்த சாதனை

பிக்பாஸ் முதல் பாகத்தில் போட்டியாளர்களாக இருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா முதன்முதலில் ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. இந்த டிரைலர் வெளியாகி 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக இப்படத்தின் டிரைலர் வரவேற்பு பெற்றிருப்பதால் இந்த படத்தின் படக்குழுவினரை மகிழ்ச்சியில் உள்ளனர்.

இளன் என்ற அறிமுக் இயக்குநர் இயக்கி வரும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *