கார் விபத்தில் இறந்த நடிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்?

முன்னாள் ஆந்திரபிரதேச முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் மகனும் பிரபல தெலு்ங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் அவர்களின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா நடந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கடைசியாக எழுதிய கடிதம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி ஹரிகிருஷ்ணாவின் 62வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட இருந்தது. இந்த பிறந்த நாளில் தனது ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹரிகிருஷ்ணா தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரவுள்ள தனது 62வது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார். ஹரிகிருஷ்ணாவின் கடைசி ஆசையுடன் கூடிய இந்த தகவல் அவரது ரசிகர்களை செய்ததுடன் நிச்சயம் ஹரிகிருஷ்ணாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவோம் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *