எங்களுக்கே தெரியாமல் நிச்சயதார்த்தமா? ஹர்திக் பாண்டியா தந்தை அதிர்ச்சி

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை நடாஷாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நடுக்கடலில் ஒரு படகில் நிச்சயதார்த்த மோதிரத்தை நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தத்திற்கு விராட்கோலி உள்பட சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்த வீடியோவை பார்த்த அவருடைய தந்தை எங்களுக்கு தெரியாமல் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply