Chennai Today News

குரேஷியாவுக்கு உலகக்கோப்பை, நமக்கு இந்து-முஸ்லீம் விளையாட்டு: ஹர்பஜன்சிங் வேதனை

குரேஷியாவுக்கு உலகக்கோப்பை, நமக்கு இந்து-முஸ்லீம் விளையாட்டு: ஹர்பஜன்சிங் வேதனை

வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சின்ன நாடான குரேஷியா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் இன்னும் இந்து-முஸ்லீம் விளையாட்டை விளையாடி வருகிறோம் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இன்னும் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதியே பெறவில்லை என்பது வேதனையான விஷயம் என்றும், விளையாட்டு துறையை சேர்ந்த ஒருவரை விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் ஆக்கவேண்டும் என்றும் டுவிட்டர் பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!