சிறப்பாக விளையாடினால் 0-3, சுமாராக விளையாடினால் 0-4. ஆஸ்திரேலியாவுக்கு புள்ளி போட்ட ஹர்பஜன் சிங்

பிப்ரவரி 23ஆம் தேதி முதல் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பிரபல சுழற்பந்து  வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால், இந்தியா தொடரை 3-0 என வெல்லும். ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால் மட்டுமே. இல்லையெனில் இந்தியா 4-0 என வெற்றி பெறும். இந்திய ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

முதல் பந்தில் இருந்து பந்து டர்ன் ஆக ஆரம்பித்தால், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்க முடியாது. பழைய ஆஸ்திரேலியா அணி என்றால் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தற்போதைய அணி இந்தியாவில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *