தேவையானவை:

கடலைப்பருப்பு – 200 கிராம், வெல்லம் – 300 கிராம், புழுங்கல் அரிசி – ஒரு கப், பால் – ஒன்றரை கப், துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 8 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10 (துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்), சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். கடலைப்பருப்பை அளவான நீர் விட்டு வேகவைக்கவும். அரைத்த அரிசி மாவுடன் பால் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, ஓரளவு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பையும் அதில் சேர்த்துக் கிளறவும். பிறகு, துருவிய வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும். இடையிடையே நெய் விட்டுக் கிளறி, இறுதியில் ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்க்கவும். பளபளவென்ற பதம் வந்ததும் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Leave a Reply