ராம்ராஜ்ய ரத யாத்திரையை அடுத்து எச்.ராஜாவின் ‘வேல் யாத்திரை’

சமீபத்தில் தமிழகத்தில் நுழைந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு திராவிட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அந்த ரதம் தமிழகத்தில் தனது வெற்றிகரமான பயணத்தை தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 24ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘வேல் யாத்திரை’ என்ற யாத்திரையை மதுரையில் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ”எதற்கு இந்த வேல் ரத யாத்திரை என்றால், பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் செய்வதுபோல தமிழகத்தில் மத மாற்றம் நடைபெறுகிறது. மைலாப்பூரில் ஜி.யூ.போப்பும், நெல்லையில் கால்டுவெல்லும் மத மாற்றத்தை தொடங்கினார்கள். அவர்களை இங்குள்ள பகுத்தறிவாதிகள் கொண்டாடினார்கள். இதற்கு முடிவு கட்டத்தான் அப்பனுக்கே பாடம் சொன்ன தகப்பன்சாமியான முருகனின் வேலை கையில் எடுத்தோம். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று திராவிட இயக்கத்தினர் பிரித்து வருகிறார்கள், அது பொய், தமிழ் மொழியை, பண்பாட்டை அழித்தவர்களே பெரியார் வழி வந்தவர்கள்தான். தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தியவர் பெரியாரும், முன்னால் ஆட்சி செய்த நீதிக்கட்சியினரும். திராவிட கழகத்தினரும்தான். இதற்கான ஆதரங்கள என்னிடம் நிறைய உள்ளது. இதையெல்லாம் சொல்லும்போது அவர்களுக்கு கோபம் வருகிறது.

இதில் இப்போது சைவ மதம் என்று வேறு பிரிக்கிறார்கள். அப்படிஎன்றால் வைணவத்தில் தமிழர்கள் இல்லையா, சைவத்துக்கு இந்தியா முழுவதும் ஜோதிர்லிங்கம் உள்ளது. சிவனுக்கு கைலாயம் முதல் தமிழ்நாடு வரைக்கும் கோயில் உள்ளது. சைவம் என்றால் தமிழன்தான், தமிழன் என்றால் இந்துதான் என்பதை நிரூபிக்கவே இந்த வேல் யாத்திரையை தொடங்கினோம். அதோடு இந்து ஆலயங்களையும், அதன் சொத்துக்களை மீட்கவும்தான் இந்த யாத்திரை. இது ராஜா நடத்துவது அல்ல, இதன் பின்னணியில் பாஜகவின் செயல்திட்டம் உள்ளது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். கண்டுபிடித்துவிட்டார், அது உண்மைதான்” என்று பேசினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *