shadow

ஐஐடி தமிழ் குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது? எச்.ராஜா

சென்னை ஐஐடி கல்வி மையத்தில் மத்திய அமைச்சர்‌ நிதின் கட்கரி பங்கேற்ற விழாவில்‌ தமிழ்‌த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஸ்டாலினுக்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஸ்டாலின் மகள் நடத்தும் ஸன் ஷைன் பள்ளியில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் என்று இருக்கும் நிலையில் அவர் ஐஐடி பற்றி பேசலாமா? அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா? என்று கூறியுள்ளார்.

எச்.ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பதிலளித்து வருகின்றனர். என்னதான் பிஜேபி யா பிடிக்கலனாலும் இது நியாயமான கேள்வி..இதுக்கும் வந்து இந்த மனுசன திட்டாமா..பதில் சொல்லுங்க.திராவிடர்ஸ்.. என்று ஒருவரும், ஐ.ஐ.டி.யில் அரசு சார்ந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்தை புறகணித்துவிட்டு ஒரு மதம் சார்பான பாடலை பாடியது குறித்து தான் கேள்வி. அவர் குறிப்பிடும் பள்ளியில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருந்தால் இந்த ஓப்பீடு சரியானது என்று மற்றொருவரும் கமெண்ட் அளித்துள்ளனர்.

Leave a Reply