shadow

நெடுவாசலுக்கும் ஒரு பாடல். ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதம் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஜி.வி.பிரகாஷூம் ஒருவர். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு எழுச்சி பாடல் ஒன்றை கம்போஸ் செய்து அதை அவரும் பிரபல பாடகர் அருண்காமராஜ் அவர்களும் பாடினர். இந்த பாடலை அருண்காமராஜ் எழுதினார்.

கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுத்து வருகிறார்

இந்நிலையில் நெடுவாசல் போராட்டம் குறித்தும் ஒரு பாடலை கம்போஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்,. இந்த பாடலையும் அருண்காமராஜ் எழுத உள்ளதாகவும் இந்த பாடல் மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வரும் ஞாயிறு அன்று நெடுவாசலுக்கு செல்லவும் ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *