shadow

விஜய் ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

நிஜத்தில் விஜய் ரசிகராக இருக்கும் நடிகர் ஜிவி பிரகாஷ், தற்போது ஒரு படத்தில் விஜய் ரசிகராக நடித்து வருகிறார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தில் ஜிவி பிரகாஷுடன் அபர்ணா, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி யாதவ் ஒளிப்பதிவில் அந்தோனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உள்ளது

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், தளபதி விஜய் ரசிகராக நடிக்கின்றார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், ‘மெர்சல்’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்ற போஸ்டரில் ஜிவி பிரகாஷின் படத்திற்கு கீழே ‘என்றும் தளபதிக்காக பீட்டர்’ என்றுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply