shadow

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர்-துணை முதல்வர் அறிவிப்பு

VijayRupani1_29605_2960536gகுஜராத் மாநிலத்தின் பெண் முதல்வர் ஆனந்தி பென் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வயது முதிர்வு காரணமாக ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக விஜய் ருபானி விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா இருவருக்கும் நெருக்கமான இவர், புதிய குஜராத் முதலமைச்சராக ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். குஜராத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்த்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள விஜய் ருபானி ராஜ்கோட் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் அமைச்சரவையில் போக்குவரத்து, தொழிலாளர் நல மற்றும் நீர்விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ருபானி தனது அரசியல் வாழ்க்கையை அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் மாணவ செயல்பாட்டாளராகத் தொடங்கினார். அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். பிறகு பாஜக என்று அவர் அரசியல் வாழ்க்கை பரிணாம வளர்ச்சி அடைந்தது. நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் ருபானி சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா நாளை காலை நடைபெறும் இந்த விழாவில் அமீத்ஷா பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply