ஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவுவது திடீர் ஒத்திவைப்பு

வரும் மே மாதம் 5ஆம் தேதி ஏவ முடிவு செய்யப்பட்டிருந்த ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய செயற்கைகோள் ராக்கெட் ஏரியன்-5 மே மாதம் 25-ந் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ராக்கெட் ஏவுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *