நிலத்தடி நீர் குறைந்து வருவதால் தண்ணீருக்காக மக்கள் வெளியேறும் அபாயம்: பரபரப்பு தகவல்

ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தண்ணீர் கஷ்டம் காரணமாக பெண்கள் குடங்களை தூக்கிக்கொண்டு கும்பல் கும்பலாக வெளியே வரும் சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு முன்னரே அரசு முறையாக செயல்பட்டு அனைத்து சென்னை வாசிகளுக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

தண்ணீர் குடத்துடன் மக்கள் வெளியே வந்தால் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என்பதை அரசு உடனடியாக புரிந்து கொண்டே தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Leave a Reply