Chennai Today News

கோல்கீப்பரே கோல் போட்ட அதிசயம்:

கோல்கீப்பரே கோல் போட்ட அதிசயம்:

கால்பந்து போட்டியில் இதுவரை கோல்கீப்பர் கோலை தடுத்து பார்த்திருப்பீர்கள், அல்லது சேம் சைடு கோல் போட்டு கூட பார்த்திருப்பீர்கள், ஆனால் ஒரு கோல் கீப்பர் தனது அணிக்காக ஒரு கோல் போட்ட அபூர்வ நிகழ்வு தற்போது நடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் செகுண்டா பிரிவு கால்பந்து ஆட்டத்தில், CD Lugo மற்றும் Sporting Gijon மோதின. இந்த போட்டியில் CD Lugo அணியின் கோல் கீப்பர் அடித்த பந்து கோல் ஆகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கோலை அடித்தவர் கோல் கீப்பர் ஜுவான் கார்லஸ் (Juan Carlos). 30 வயதான ஜுவான், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். இவர், 2005-ம் ஆண்டிலிருந்து கால்பந்து விளையாட்டை விளையாடிவருகிறார். மேலும் இந்த கோல் அடித்த தேதி ஜனவரி 20, இவருடைய பிறந்த நாள் ஜனவரி 21. எனவே இவருக்கு இதைவிட வேறு சிறந்த பிறந்த நாள் பரிசு இருக்க முடியாது என்றே கருதப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!