shadow

இந்தியாவிலேயே சென்னையில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள புதிய செயலி

உலகின் அனைத்து சேவைகளுக்கும் ஆப்ஸ் என்ற செயலி வந்துவிட்டாலும் இதுவரை இந்தியாவில் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க என்று ஒரு செயலி வரவில்லை. அந்த குறை தற்போது நீங்கியுள்ளது.

சென்னை கலெக்டர் இன்று புதிய நுகர்வோர் சேவை செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலியின் பெயர், டிஎன்-எல்எம்சிடிஎஸ் (TN-LMCTS). இந்தச் செயலியை தமிழகத் தொழிலாளர்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறுகையில், ’கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வணிகச் சந்தைகள் என அனைத்து இடங்களிலும் தாங்கள் வாங்கும் பொருள்களின் எடை குறைந்து காணப்பட்டாலோ, பொருள்களின் தரம், விலை, எடை ஆகியவற்றில் குழப்பங்கள், பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தால், உடனடியாக இந்தச் செயலியில் புகார் அளிக்கலாம். இந்தப் புகார்கள், உடனடியாகத் தொழிலாளர் துறையின் கவனத்தில் எடுத்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply