shadow

சட்டசபையில் கவர்னர் உரை: வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார்.

தமிழக சட்டசபை இன்று காலை தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை ஆற்றி வருகிறார். அவர் தமிழில் வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி உரையை தனது உரையை தொடங்கினார் ஆளுனர் தனது உரையை வாசிக்க தொடங்கியதும், ஆளுநரை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல், குழப்பம் விளைவித்தனர். * விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ஆளுநர் அறிவுரை கூறியும் கூச்சல் குழப்பம் நிற்கவில்லை. இதனால் கவர்னர் தனது உரையை தொடர்ந்ததால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம்போல் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆளுனரின் உரையில் உள்ள சில முக்கிய விஷயங்கள்:

கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது

பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகளை இயற்றி சிறந்த ஆட்சியை தொடர்ந்து வழங்கும்

மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்

ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்

பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது

5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது

Leave a Reply