shadow

டெல்லியின் அதிகாரத்தில் யாருக்கு முக்கியத்துவம். ஐகோர்ட் முக்கிய உத்தரவு

delhiடெல்லி மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதில் இருந்தே டெல்லியில் அதிகாரம் மிக்கவர் யார்? என்ற சர்ச்சை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருந்து வருகிறது. மத்திய அரசு பழிவாங்கும் போக்குடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை கைது செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் டெல்லியின் அதிகாரம் குறித்து இன்று நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெல்லி மாநிலத்தில், நிர்வாக தலைவராக கவர்னர் மட்டுமே செயல்பட முடியும் என்று டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதன்மூலம், கவர்னருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் அதிகாரிகள் இடமாற்றம், அதிகாரப் பகிர்வில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பன தொடர்பாக டெல்லி அரசு சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

அந்த தீர்ப்பில், டெல்லி மாநிலத்தில் நிர்வாக தலைவராக கவர்னரே செயல்பட முடியும். டெல்லி மாநில அமைச்சரவையின் முடிவு, துணைநிலை கவர்னரை கட்டுப்படுத்தாது. மேலும், மாநில அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்க வேண்டிய அவசியம், கவர்னருக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply