shadow

orkut-shutterstock-010714சமூக இணையதளங்களில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த ஆர்குட் சமூக இணையதளத்தை வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்குட், ஃபேஸ்புக் வருகைக்கு பின்னர் பின்னுக்கு தள்ளப்பட்டாலும், இந்தியாவில் பிரபலமாக இருந்தது. ஆனால் ஃபேஸ்புக், டுவிட்டர் , கூகுள் பிளஸ் போன்ற சமுக இணையதளங்களுக்கு ஆர்குட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. கூகுளின் யூடியூப், பிளாக்கர் ,ஜி பிளஸ் போன்ற தளங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தபோதிலும் ஆர்குட் மட்டும் நாள் ஆக ஆக அதன் வாடிக்கையாளர்கள் குறைந்துகொண்டே போனார்கள்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்குட்டை நிறுத்திக்கொள்ளப் போவதாக கூகுள் அறிவித்துள்ள போதிலும் இதன் உறுப்பினர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் தகவல்களை சேமித்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.  இனி புதிய உறுப்பினர்கள் ஆர்குட்டில் சேர முடியாது. ஆனால், ஆர்குட் சமூகங்களை மட்டும் ஆவணமாக பாதுகாக்கப் கூகுள் உறுதி அளித்துள்ளது. கூகுளுக்கே கூட இது கஷ்டமான முடிவாகத்தான் இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லாததால் ஆர்குட் நிறுத்தப்படுகிறது.

Leave a Reply