கடந்த 2012ஆம் ஆண்டு மோட்டரொலா மொபைல் நிறுவனத்தை 12.4 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கி கையக்கப்படுத்திய கூகுள் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக அந்த நிறுவனத்தை விற்க முன்வந்துள்ளது.

நேற்று மோட்டரோலா நிறுவனத்தை விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், அந்த நிறுவனத்தை லேனோவா நிறுவனம் 2.9 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் இதுவரை இருந்த வந்த நிதி நெருக்கடியில் இருந்து கூகுள் நிறுவனம் தப்பியதாக கூறப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் கூகுளின் கைகளுக்கு வந்தபிறகு பெரும் பின்னடைவையே சந்தித்தது. 20,000 பேர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தற்போது 3800 பேர் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். சந்தை நிலவரப்படி மோட்டொரோலா நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் டாலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா நிறுவனத்தை கூகுள் விற்பனை செய்தபோதிலும், மோட்டரோலாவின் மொபைல் காப்புரிமையை கூகுள் தன்னிடமே வைத்துள்ளது. இந்த காப்புரிமையை வைத்துதான் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பொருட்களையும், டேப்லட் கம்ப்யூட்டர்களையும் உருவாக்க முடியும் என்பதால் அந்த காப்புரிமையை மட்டும் கூகுள் விட்டுத்தரவில்லை.

Leave a Reply