மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்: கூகுள் அதிரடி அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அறிவித்து இருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் மீண்டும் சில மாதங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறிவித்துள்ளது.

கூகுள் மட்டுமின்றி மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் இன்னும் சில மாதங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என அறிவித்துள்ளன.