shadow

ஆரக்கிளிடம் தோல்வி அடைந்தது கூகுள்: 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படுமா?

கம்ப்யூட்டர் மொழிகளுக்கு அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் ஏற்கனவே விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியுள்ள நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு கூகுள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு டால்விக் என்ற மென்மொருள் மூலம் சுமார் 42 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கூகுள் மீது ஆரக்கிள் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கூகுளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து ஆரக்கிள் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பில் கூகுள் நிறுவனம் காப்புரிமை மீறியுள்ளதாகவும், இதற்காக அந்நிறுவனம் எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பது குறித்து கீழ் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் இந்த தீர்ப்பில் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தோல்வியடைந்த கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 9 பில்லியன் டாலர் வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூகுளுக்கு இதுவொரு பின்னடைவு என்று கூற முடியாது என்றே கூறப்பட்டு வருகிறது

Leave a Reply