shadow

ஸ்ரீதேவி மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த கூகுள் சி.இ.ஓ

உங்களது சோக இழப்பால் வருந்துகிறேன் என்று ஸ்ரீதேவி மரணம் குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை ‘ஸ்ரீதேவியின் நடிப்பில் எனக்குப் பிடித்த படம் சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவுகள் இன்றும் உள்ளது. உங்களது சோக இழப்பு என்னை வருத்தம் அடையச் செய்துள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது உலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் அந்த அதிர்ச்சி மற்றும் சோகத்தில் இருந்து யாரும் மீளவில்லை. இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழருமான சுந்தர் பிச்சையும் விலக்கு அல்ல. தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில், ”ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது. அவர் நமக்கெல்லாம் முன்னோடி. பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது சோக இழப்பால் நாங்கள் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாலிவுட்டில் கோலோச்சி, பின்னர் சூப்பர் ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றவர் ஸ்ரீதேவி. அவரது இறுதிச் சடங்கில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வந்த விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply