shadow

இஸ்லாமியர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கூகுள் சுந்தர்பிச்சை  விளக்கம்
sundhar
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமியர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்தவரும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர்பிச்சை சமூக வலைத்தளம் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

“நான் 22 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். அதிருஷ்டவசமாக இங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. கடினமான உழைப்பாளிகளுக்கு எப்போதுமே அமெரிக்கா தனது கதவுகளை திறந்தே வைத்துள்ளது. நான் எனது பணி, குடும்பம் என அனைத்தையும் அமெரிக்காவிலேயே அமைத்துக்கொண்டேன்.

லட்சக்கணக்கான தடைவகள் சொல்லப்பட்டது போல அமெரிக்கா ’வாய்ப்புகளுக்கான இடம்’. ஆனால் இதுவெறும் வாய்ப்புகளுக்கான இடம் மட்டுமில்லை. அமெரிக்கா திறந்த மனதும், சகிப்புத்தன்மையும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பும் கொண்ட நாடு. இவைதான் அமெரிக்காவின் பலமும் குணமும் ஆகும்.

பயம் நமது மதிப்பீடுகளை தோற்கடிக்க அனுமதிக்க வேண்டாம். நாம், அமெரிக்காவிலும், உலகம் முழுவது உள்ள இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்க வேண்டும்”

இவ்வாறு சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

சுந்தர்பிச்சை கூறியதன் ஆங்கில வடிவம் இதோ:

“The open-mindedness, tolerance, and acceptance of new Americans is one of the country’s greatest strengths and most defining characteristics. And that is no coincidence — America, after all, was and is a country of immigrants.

    That is why it’s so disheartening to see the intolerant discourse playing out in the news these days — statements that our country would be a better place without the voices, ideas and the contributions of certain groups of people, based solely on where they come from, or their religion.

    I walk around the campus where I work and see a vibrant mix of races and cultures. Every one of those people has a different voice … a different perspective … a different story to tell. All of that makes our company an exciting and special place to be, and allows us to do great things together.”

Leave a Reply