தங்கம் விலை திடீர் சரிவு: மக்கள் மகிழ்ச்சி, முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை ஆகிறது
இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்தை விட குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சென்னை விலையாக ஒரு கிராம் தங்கம் ரூ.3,934க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.31,472க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவே தங்கம், வெள்ளி உள்பட அனைத்து விலைகளின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.