shadow

சண்டி மாதாவின் கருணையால்தான் யாகசாலை பந்தல் தீப்பிடித்தது. பீடாதிபதி விளக்கம்
yaga
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நடத்திய யாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது கெட்ட சகுனம் என ஒருசில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் யாகசாலை பந்தலில் தீப் பிடித்தது நல்ல சகுனம்தான் என்றும், அது கடவுளின் ஆசிர்வாதம் என்றும் சாரதா பீடாதிபதி சொரூபனந்தா சுவாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  உலக அமைதி மற்றும் நன்மைக்காக பல கோடி ரூபாய் செலவில் மகா சண்டி யாகத்தை கடந்த 23ஆம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று யாகத்தின் கடைசி நாளில் மதியம் யாகசாலை பந்தலின் ஒருபகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் யாகசாலை பந்தலில் தீப்பிடித்தது கெட்ட சகுனமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து சாரதா பீடாதிபதி சொரூபனந்தா சுவாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ”பிரமாண்டமான முறையில் யாகம் நடக்கும்போது இதுபோன்ற விபத்து நடப்பது இயல்புதான். பூர்ணாஹுதி பூஜை முடிந்த பின் யாகசாலை பந்தலை எரித்துவிட வேண்டும். ஆனால் தானாகவே பந்தல் தீப்பிடித்து உள்ளது. சண்டி மாதாவின் கருணையால் அவரே பந்தலை எரித்து உள்ளார். சிலர் பந்தல் தீப்பிடித்தது கெட்ட சகுனம் என்கிறார்கள். ஆனால் இது உண்மையில் நல்ல சகுனமே. இது நல்லதுதான். துர்கா தேவி யாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Leave a Reply