shadow

ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் லட்சுமி படம்: பண மதிப்பு உயர சுப்பிரமணியம் சுவாமி ஐடியா!

தற்போது இந்திய கரன்ஸியில் மகாத்மா காந்தியின் படம் இருந்து வரும் நிலையில் அதற்கு பதிலாக லட்சுமியின் படத்தை வைத்து விட்டால் பண மதிப்பு உயரும் என பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தோனேசியா நாட்டின் கரன்சியில் விநாயகர் படம் அச்சிட்டு இருப்பதாகவும் விநாயகர் தடைகளை நீக்குவார் என்பதால் அந்த நாட்டினர் விநாயகர் படத்தை அச்சிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்ட சுப்பிரமணியம் சாமி அதேபோல் இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படம் அச்சடிக்க தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவ்வாறு செய்தால் பணவீக்கம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சுப்பிரமணியன் சாமியின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *