தேசிய அளாவில் டிரெண்ட் ஆன ‘கோபேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேக்: அதிர்ச்சியில் திமுகவினர்

கோபேக் மோடி மற்றும் கோபேக் அமித்ஷா ஆகிய டுவிட்டர் ஹேஷ்டெக்குகளை அடுட்த தற்போது கோபேக் ஸ்டாலின் என்ற ஹாஷ்டாக் டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

பாரத பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் சென்னை வந்திருந்தபோது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்தன. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று அதே போன்ற ஆயுதத்தை பாஜகவின் இணையதளவாசிகள் கையில் எடுத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். இதனையோட்டி, பா.ஜ.க-வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ‘கோபேக் ஸ்டாலின்’ என்ற ஹாஷ்டாக் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ‘வெல்கம் ஸ்டாலின்’ என்ற ஹாஷ்டேக் ஒன்றை பதிவு செய்து இணையப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது திமுக.

இந்த இரு கட்சிகளின் இணைப்போரில் அடுத்தகட்டம் என்னவாக இருக்க்ம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *