அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்? ஜிகே வாசனுக்கு ஒரு இடமா?

வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் திமுக தனது மூன்று வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்கள் குறித்த செய்தி கசிந்துள்ளது.

இதன்படி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கே.பி. முனுசாமி அவர்களுக்கு தற்போது ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லாததால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரை எம்பியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த தம்பிதுரைக்கு மீண்டும் முக்கியத்துவம் தரும் வகையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கூட்டணி கட்சியான தமாக தலைவர் ஜி.கே. வாசனுக்கு வாய்ப்பு கொடுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply