shadow

action_2333081h

சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோமி, பார்சிலோனா மொபைல் கண்காட்சியில் ஆக்‌ஷன் காமிராவை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்.ஐ ஸ்மார்ட் போன் போல ஒய்.ஐ ஆக்‌ஷன் காமிராக்கள் அறிமுகமாகியுள்ளன.

ஆக்‌ஷன் காமிரா உலகில் அசத்திக்கொண்டிருக்கும் கோ ப்ரோ காமிராக்களுக்கு இது சரியான போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஜியோமியிடம் எதிர்பார்க்கக் கூடியது போலவே இந்த புதிய காமிரா மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. கோ ப்ரோவின் அறிமுக நிலை காமிரா 130 டாலர் என்றால் இதன் விலை அதில் பாதிதான். ரூ.4,000தான். நொடிக்கு 60 பிரேம் எனும் அளவில் இது வீடியோவை எடுத்துத் தள்ளக்கூடியது.

தண்ணீருக்கு அடியிலும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கம் போல எம்.ஐ இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கும் பிளேஷ் சேல்தான். சர்வதேச அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply