shadow

பூடான் எல்லையில் ஜிப்ரானை காபாற்றிய கமல்-ரஜினி

gibran‘வாகை சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஜிப்ரான், கமல்ஹாசன் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து புகழ் பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை முதல் சிங்கப்பூர் வரை ஆறு நாடுகளுக்கு சாலை வழியே காரில் சென்று ஆறு பாடல்களை வெளியிடும் பயணத்தை ஆரம்பித்தார். இதுவரை இரண்டு நாடுகளில் இரண்டு பாடல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் 3வது பாடலை வெளியிட அவர் பூடான் பார்டர் அருகே பயணம் செய்தபோது அங்கு அவரை வழிமறித்த அதிகாரிகள் ஒருசில டாக்குமெண்டுக்கள் இல்லாததால் அவரை திரும்பி போகும்படி அறிவுறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிப்ரான் கடைசி முயற்சியாக ஜிப்ரான் ‘தான் ஒரு இசையமைப்பாளர் என்றும் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் பாபநாசன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜிப்ரான் சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்த அந்த அதிகாரிகள் உடனே அவர்களு டீ வரவழைத்து குறித்து தமிழ் சினிமா குறித்தும் குறிப்பாக கமல், ரஜினி குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுடைய பேச்சின் இடையே கபாலி குறித்தும் இடம்பெற்றது.

பின்னர் ஜிப்ரானிடம் வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் அவருடைய பயணத்தை தொடர அனுமதித்ததோடு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர். கமல், ரஜினியால் தனது பயணம் இனிதே தொடர்ந்ததாக ஜிப்ரான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply