shadow

உதயநிதியின் ‘கெத்து’ படத்திற்கு ‘U’ சர்டிபிகேட்

Gethu-Movieஒருகல் ஒருகண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள  ‘கெத்து’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று இந்த படம் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘U’ சர்டிபிகேட் அளித்துள்ளனர்.

‘U’ சர்டிபிகேட் இந்த படத்திற்கு பெற்றிருந்தபோதிலும் அரசியல் காரணங்களால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தை உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply