shadow

வீடு தேடி வரவேண்டுமா ஜியோ சிம்? இதை செய்தால் போதும்

activate-jio-simஇந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை சமீபத்தில் ஏற்படுத்தியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம். மூன்று மாதங்கள் இணையம் இலவசம் என்ற அறிவிப்புடன் வெளிவந்த இந்த சிம்-ஐ வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நின்ற இளைஞர்களை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் சிம்-ஐ வீட்டுக்கே வந்து டோர் டெலிவரி செய்யவுள்ளனர். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டுக்கு சென்று அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது 1 800 200 200 9 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிம் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் உங்கள் வீட்டுகே வந்து அடையாள அட்டையை சரிபார்த்துவிட்டு உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிம்-ஐ கொடுத்துவிடுவார்.

Leave a Reply