shadow

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவிடம் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
modi
பாரத பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு உலக தலைவர்கள் வந்து பிரதமரிடம் முக்கிய ஆலோசனை செய்து வருகின்றனர். அதன்படி இந்திய சுற்றுப்பயணம் செய்து வரும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கல் இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

3 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு  வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்பட பலர் வரவேற்பு அளித்தனர். முதலில் ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஏஞ்சலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரம், வேளாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு, வளர்ச்சி, பாதுகாப்புத் துறை மேம்பாடு, நிதி தொடர்பான அணுகுமுறை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடி  பிரிஸ்பேன் பயணத்தின்போது, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவை இந்தியா வரும்படி கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ஜெர்மனி பிரதமர் இந்திய சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply