shadow

பாரீஸ் ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து பதிலளித்துள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடை பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் அதிபரானால் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதன்படி தற்போது அதிபராகியிருக்கும் டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக இந்த ஒப்பந்தட்தில் உள்ள சில கொள்கைகளை மறுபரிசீலனை செய்யும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால் புதிதாக மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தெரிவித்துவிட்டதால் டிரம்ப் தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். டிரம்பின் இந்த முடிவை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply