தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள தனிச்சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூரில் பாரம்பரியமாக தயாரித்து வரும் கைவினை கலைஞர்கள் பதிவு செய்தனர். இந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, சேலம் பட்டு சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலை யாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவை

  • சேலம் மாம்பழம்
  • ஓசூர் ரோஜா
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
  • திண்டுக்கல் பூட்டு
  • ராஜபாளையம் நாய்
  • காரைக்குடி கண்டாங்கி சேலை
  • கோடாலிகருப்பூர் சேலை

 

Leave a Reply