shadow

வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா, 14 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பினார்.
geetha
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தெரியாமல் வழிதவறி பாகிஸ்தானின் லாருக்கு சென்ற இந்திய பெண் கீதா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இன்று நல்லபடியாக நாடு திரும்பினார். அவருக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எதி அறக்கட்டளையைச் சேர்ந்த சபா எகியும் என்பவரும் உடன் வந்தார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  “ஒரு மகள் வீடு திரும்பிவிட்டாள். எதி அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கீதா டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். கீதா விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தியா திரும்பியுள்ள கீதாவுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர் கீதா அவரது குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருடன் கீதாவின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்றால் கீதாவை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு இந்திய அரசியல் சாசன பிரிவு 13-ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English Summary: Geeta to return home today from Pakistan after 14 years

Leave a Reply