shadow

பெண்களை மதிப்பது எப்படி என்பதை அஜித்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். பிரபல நடிகை

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவரை பற்றி புகழ்ந்து ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒருமுறை கோலிவுட் பிரமுகர்கள் அஜித் குறித்தும், அவரது குணங்கள் குறித்தும் பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமிபத்தில் இந்த லிஸ்ட்டில் இணைந்தவர் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் தனது டுவிட்டரில் அஜித் குறித்த ஒரு கேள்விக்கு, ‘அஜித் பெண்களை மதிப்பில் உயர்ந்த குணம் உடையவர். பெண்களுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் எவ்வாறு தர வேண்டும் என்பதை அனைவரும் அஜித்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் அவரிடம் இருந்து இன்னும் நிறைய குணநலன்களை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்

அஜித்தின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட, அவருடைய மனித நேயத்தை, நல்ல குணநலன்களை பலர் கூறி வரும் நிலையில் முதல்முதலாக பெண்கள் விஷயத்தில் அஜித் எப்படிப்பட்டவர் என்பதை காயத்ரி ரகுமார் கூறியுள்ளார். இவர் பல அஜித் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply