ராஜபாளையம் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் கௌதமி பதிவு செய்த டுவிட்!

ராஜபாளையம் பகுதியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அந்த தொகுதியில் தான் போட்டியிடலாம் என்றும் நடிகை கவுதமி திட்டமிட்டிருந்தார்

ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிருப்தி அடைந்த கௌதமி தற்போது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.

Leave a Reply

Your email address will not be published.