மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் அருண்விஜய்?

arunvijayஅஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் நடித்த அருண்விஜய்யின் நடிப்பை ஊடகங்களும், அஜீத் ரசிகர்களும் புகழ்ந்து தள்ளினர். இந்த படம் அருண்விஜய்க்கு ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது. கவுதம் மேனன் அளித்த இந்த வாய்ப்பை அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்நிலையில் கவுதம் மேனன் தற்போது சிம்பு நடித்து  வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் விக்ரம் நடிக்கவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க அருண்விஜய்யை கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அருண்விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘வா டீல்’ என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவுள்ள ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *