shadow

சசிகுமார் – நந்திதா படத்திற்கு உதவி செய்த இயக்குனர் கெளதம் மேனன்

சசிகுமார் நடித்த கொடிவீரன்’ படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் ‘அசுரவதம்’. இந்த படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கிய எம்.மருதுபாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டீசரை இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *