ராகுல் கழுத்தில் விழுந்த மாலையை போட்டது யார்? வைரல் வீடியோ

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் உள்ளார்.

இந்த நிலையில், தும்கூருக்கு வந்த ராகுல் காந்தி திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவு திரட்டினார். தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து அவர் கையசைத்துபடி சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் ஒரு மாலை வந்து விழுந்தது. கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், ராகுல் காந்தியை நோக்கி வீசிய அந்த மாலை மிகச்சரியாக, ராகுல் காந்தியின் கழுத்தில் விழுந்தது.

இதனால் சற்று பயந்துபோன ராகுல், மாலை என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தார். மாலை வந்த திசையில் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடியே தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *