gangai amaran in bjpஇசைஞானி இளையராஜாவின் சகோதரரும் மங்காத்தா உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவின் தந்தையுமான இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று சென்னையில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் கங்கை அமரன் பாஜகவில் இணைவார் என்ரு கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை கங்கை அமரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாஜகவில் இணையவுள்ள கங்கை அமரனுக்கு மாநில அளவில் பதவி வழங்கப்படும் என பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *