shadow

12096194_539016559588423_70505221256789767_n

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்குவரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.

Leave a Reply