இயேசுநாதர் குறித்து மகாத்மா காந்தி தனது கடிதத்தில் எழுதியது என்ன தெரியுமா?

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவர் மில்டன் நியூபெர்ரி பிராண்ட்ஸ் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினா.ர் அந்த கடிதத்தில் அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பெருமையாகி எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது ஏலத்திற்கு விடப்படவுள்ளது

ஏசு கிறிஸ்து மனித குலத்தின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவராக திகழ்ந்தார்” என்று மகாத்மா காந்தி எழுதிய அந்த படிதம் தற்போது அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ‘ராப் கலெக்‌ஷன்’ என்று அழைக்கப்படுகிற வரலாற்று சிறப்புவாய்ந்த ஆட்டோகிராப் (கையெழுத்து) மற்றும் ஆவண சேகரிப்பு நிறுவன அலுவலகத்தில் உள்ளது.

இந்த கடிதம் விரைவில் ஏலம் விடப்படவுள்ளதாகவும், இந்த கடிதம் சுமார் 50 ஆயிரம் டாலருக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘ராப் கலெக்‌ஷன்’ நிறுவனத்தின் நாதன் ராப் கூறியுள்ளார். மேலும் \உலகின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவர் ஏசு கிறிஸ்து என்ற காந்தியின் நம்பிக்கை, சக மனிதர்களுடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *