shadow

gandhiஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஷ் தொடர் மிகவும் பிரபலமானது. இதற்கு இணையாக ஒரு தொடரை நடத்த இந்திய- தென்ஆப்ரிக்க அணிகளின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே காந்தி- மண்டேலா பெயரில் புதிய கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் என்று தென்ஆப்ரிக்க கிரிக்கெட் சங்க தலைமை செயல் அதிகாரி ஹாருன் லோர்கத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தபோது, “ஆஷஷ் தொடர் போல இந்தியா- தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே காந்தி -மண்டேலா பெயரில் கிரிக்கெட் தொடர் உருவாக்க முடிவு செய்யப்பட்டு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. வரும் 2017ஆம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டி கொண்ட முதல் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்காவில் அடுத்த தொடர் நடைபெறும் . இந்த தொடரை கிரிக்கெட் உலகின் நட்சத்திர தொடராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தற்போது டெஸ்ட் தரவரிசையில் தென்ஆப்ரிக்க அணிதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்ஆப்ரிக்க அணி இந்தியாவுக்கு வந்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
 

Leave a Reply