shadow

ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீஸ் தேட்கு

kikஇசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் இருதுறைகளிலும் சாதித்து வரும் நிலையில் தற்போது அவர் ‘புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு, ராஜீவ் மேனன் என பிசியாக உள்ளார். இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.,பிரகாஷ் நடித்து முடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா அறிவித்துள்ளார். ஏற்கனவே இதே தேதி விஷாலின் கத்திச்சண்டை, கார்த்தியின் ‘காஷ்மோரா’ மற்றும் தனுஷின் கொடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *