விஜய் ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கும் போனஸ்

theriஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான இந்த படத்தின் ஏழு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸூக்கு பின்னர் புதியதாக ஒரு சிறு பாடலை இணைத்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்.

இந்த பாடலை தற்போது வெளியிட ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளராம். இதுகுறித்த அறிவிப்பு எப்போதுவேண்டுமானாலும் அவரிடம் இருந்து வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு போனஸாக இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். ‘தெறி’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு போனஸ் பாடல் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள தெறி படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிர்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Chennai Today News: G.V.Prakash’s bonus for Vijay fans

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *